பாருடா… “தொழிலதிபர் அவதாரம் எடுத்த ராஷ்மிகா மந்தனா”…!!!!!

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்பொழுது தொழிலதிபராக களம் இறங்கியுள்ளார்.

கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படம் பிளாக் பாக்ஸர் வெற்றியை பெற்றது. வசூலிலும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது.

தற்போது இவர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றார். மேலும் புஷ்பா 2, குட்பை, ரன்பீர், அனிமல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ராஷ்மிகா தற்பொழுது தொழிலதிபராக களமிறங்கியுள்ளார். வேகன் பியூட்டி மற்றும் பெர்சனல் கேர் ப்ளம் பிராண்டின் அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். மேலும் பிராண்ட் தூதராகவும் பொறுப்பேற்று இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *