பாரத ரத்னா விருது கொடுங்க…. வேண்டுகோள் வைத்த புதுச்சேரி முதல்வர்….!!

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்த்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களைப் பாடி உலகப்புகழ் பெற்றவர் எஸ்.பி.பி.கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்ட அவர் அதற்குப் பின் உடல்நலக்குறைவால் காலமானார். திரை உலகத்தினர் மட்டுமின்றி அவர் இறப்பிற்கு இந்த நாடே கண்ணீர் விட்டது . அவர் ஆத்மா ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடன் நான் பழகி இருக்கிறேன். அவர் பணி மிகவும் சிறப்பானது. ஏனாமில் 2020இல் நடைபெற்ற கலாச்சார விழாவில் கலந்துகொண்டு எஸ்.பி.பி பாலசுப்பிரமணியத்துக்கு நான் விருது வழங்கினேன். மிகச் சிறந்த இசைக் கலைஞரை நாம் இழந்துள்ளோம். அவர் இந்த உலகத்திற்கு மட்டுமல்லாமல், இசை உலகிற்கு மிகப் பெரிய இழப்பு ஆதலால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரை வேண்டிக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *