“பாரத் பந்த்”… விவசாயிகள் அணிவகுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்…. ஸ்தம்பித்த தலைநகரம்…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசின் திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்ததன் ஓராண்டு தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் எல்லைகளில் விவசாயிகள் நடத்திய பேரணி காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தலைநகர் டெல்லியில் ஆட்டோ ரிக்ஷாக்கள் மட்டும் இயங்கின. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேருந்துகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *