நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15 சதவீதம் அதிகரித்த நிலையில் மத்திய அரசு மானிய விலையில் பாரத் அரிசியை விற்பனைக்கு கொண்டு வந்தது. கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டமாக அரிசிகள் அனுப்பப்பட்டு விற்பனை செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அரிசியை வாங்கி மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய இருந்த பாரத் அரிசி விற்பனை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மாநிலங்கள் தங்கள் நலத்திட்ட உதவிகளுக்கு தேவைப்படும் அரிசியை இந்த உணவு கழகத்திடம் இருந்து குவிண்டாலுக்கு 2,800 என்ற விலையில் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் என்று கூறிய அவர், மின்னணு ஏலத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.