உத்திரபிரதேச மாநிலம் பரூக் பாத் மாவட்டத்தில் வசிப்பவர் தினேஷ்குமார். இவருடைய மகன் ஆயுஷ்(3) மூன்று வயது சிறுவனான இவர் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று பாட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பதறி அடித்துக்கொண்டு வந்து பெற்றோர் பார்த்தபோது ஆயுஷ் தன்னுடைய வாயில் எதையோ மென்று கொண்டிருந்தார்.

இதை பார்த்த பெற்றோர் அதை வாயில் இருந்து எடுத்த போதுதான் அது பாம்பு என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இறந்த பாம்பை பையில் போட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 24 மணி நேர கண்காணிக்கும் பிறகு குழந்தை அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவித்தனர். தற்போது குழந்தை நலமுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.