பாம்பு ஒன்று தண்ணீரில் இருந்து வெளியே வந்து உயிருக்கு போராடிய மீன் ஒன்றைக் காப்பாற்றிய வீடியோவானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் .தலை தெறிக்க ஓடுவார்கள் . இதற்கு காரணம் பாம்பின் விஷ தன்மை தான் .

இதன் விஷம் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும். ஆனால் சமீபகாலமாகவே  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும்  பாம்புகளோடு விளையாடுவதை பார்த்து வருகிறோம்.  இந்த நிலையில் மீன் ஒன்று வெளியில் தத்தளிக்கும் நிலையில் ,அந்த  நேரத்தில் வேகமாக வந்த பாம்பு மீனை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி கடைசியில் தண்ணீருக்குள் கொண்டு சேர்த்து அதனுடைய உயிரை காப்பாற்றி உள்ளது.