பான் இந்தியா திரைப்படமாக உருமாகும் விஜய் படம்… இது நம்ம லிஸ்டிலயே இல்லையேப்பா…!!!

தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் தகவல்கள் கேட்டு வருகின்ற நிலையில் லோகேஷ் எந்த ஒரு தகவலையும் சொல்லாமல் இருக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தமாகி இருக்கின்றார். இது போலவே மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இருந்தும் பெரிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருக்கின்றார்கள். இதன் மூலம் இத்திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாக இருக்கின்றதாம். விஜய் நடிக்கும் முதல் பான் இந்தியா திரைப்படமாக தளபதி 67 திரைப்படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply