புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் இன்று மதுரையில் உள்ள அவருடைய வீட்டில் குளியல் அறையில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் உயிரிழந்துவிட்டார். அவருக்கு தற்போது 65 வயது ஆகிறது. அவருடைய மறைவுக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு வெளியிட்ட பதிவில், பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இறந்த செய்தியை கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அமானுஷ்யமும் மர்மமும் நிறைந்த புனை கதைகளை எழுதுவதில் வல்லவரான அவர் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர். நிகழ்காலத்தில் வரலாற்று காலத்தையும் இணைத்து சுவாரசியமாக புத்தகங்களை எழுதுவார். அவர் வெற்றிகரமான பல தொலைக்காட்சி தொடர்களிலும் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.