பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட விவசாயி…. இரவில் நடந்த பயங்கர சம்பவம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

காட்டு யானை விவசாயியை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி பிரிவு பீக்கிரி பாளையம் பகுதியில் விவசாயியான குருநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். இதனை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு குருநாதன் இரவு நேரத்தில் தனது தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குருநாதனின் தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து யானையின் பிளிறல் சத்தம் கேட்டு குருநாதன் டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார்.

அப்போது கோபமடைந்த காட்டுயானை குருசாமியை துதிக்கையால் தூக்கி வீசி மிதித்து கொன்று விட்டு அங்கிருந்து சென்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குருநாதனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து குருநாதனின் குடும்பத்திற்கு வனச்சரகர் பெர்னாட் ஆறுதல் கூறி 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *