பாட்டிக்கு கிடைத்த…. கிறிஸ்துமஸ் பரிசு…. காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

பாட்டி ஒருவர்க்கு லாட்டரியில்  பரித்தொகை கிடைத்துள்ளது இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

பிரிட்டனில் வாழ்ந்துவரும் பாட்டி Diane (70). இந்த பாட்டிக்கு லாட்டரி டிக்கெட்டில் பரிசு ஒன்று விழுந்துள்ளது. இதுவரை Dianeவிற்கு கிடைத்துள்ள பரிசு தொகை 100 பவுண்டுகள் ஆகும். ஆனால் தற்போது 3.8 மில்லியன் பவுண்டுகள் கிடைத்துள்ளது. இதனை அறிந்த Diane உறக்கத்திலிருந்த தனது கணவரை உடனடியாக எழுப்பி செய்தியை கூறியுள்ளார். இருப்பினும் அவர் அதனை நம்பவில்லை. மேலும்  ஆறு முறை பரிசுத்தொகையை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். பின்னர் அவரது பேரப்பிள்ளைகள் கூறிய பிறகுதான் நம்பியுள்ளார்.

மேலும் Dianeவின் கணவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு எதுவும் வேண்டாம் எல்லாமே என்னிடம் இருக்கிறது இருப்பினும் கைப்பை மட்டும் வாங்க வேண்டும் என்பதே ஆசை என்று எளிமையாக கூறியுள்ளார். ஆனால் பாட்டி, தனக்கு உலகம் முழுவதும் சுற்றி பார்க்க ஆசை எனவும் அவரது உறவினர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பதால் அவர்கள் அனைவரையும் சென்று சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது பேத்தி ஒருவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதால் திருமணத்திற்கு தன்னால் போக முடியாது என்றாலும் மறக்க முடியாத அளவில் பரிசு ஒன்றை கொடுக்கப் போகிறாராம். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட விரும்பியுள்ளார்.