தமிழ்நாடு பாஜகவில் இருந்து அண்மையில் காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரம் தொடர்பாக பேசியதால் ஆறு மாதம் கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் கடும் அதிர்ச்சியான காயத்ரி பாஜகவில் இருந்து விலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார். இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.