பாஜக கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. இவருக்கு 97 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 4 மாதங்களில் 5-வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கடந்த சில மாதங்களாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருக்கும் நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.