பாஜக பிரசாரத்துக்கு நான் கண்டிப்பா போனும் – நடிகை நமீதா பேட்டி …!!

வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட உள்ளதாக நடிகை நமீதா தெரிவித்திருக்கிறார்.

பாஜகவில் இணைந்த பின்னர் முதல் முறையாக அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நடிகை நமீதா வருகின்ற தேர்தல் கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும்,  பிரச்சாரத்திற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

மேலும் வேறு கட்சி என்ன செய்கிறதோ அதனை பற்றி சிந்திக்காமல் பாஜகவின் செயல்பாடு திட்டங்களை முன்னெடுத்து வாக்கு கேட்பேன் என்றும் நடிகை நமீதா மகிச்சியுடன் தெரிவித்தார் .  தமிழக முதலமைச்சர் பழனிசாமி அவர்களின் செயல்பாடுகள் மிக சிறப்பானதாக அமைகிறது என நடிகை நமீதா கூறியுள்ளார் .