பாஜக நிர்வாகி சாலை விபத்தில் திடீர் மரணம்… பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்…!!!!

பாஜகவின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர்  மணி சக்திவேல் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, மணி சக்திவேல் சாலை விபத்தில் காலமானார் என்ற துயர செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் பாஜக நிர்வாகிகள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.