பாஜக நிர்வாகியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!!

பாஜக நிர்வாகி யின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூனே சின்ச் வாட் நகரத்தை சேர்ந்தவர் 21 வயதான பிரசன்னா சேகர் சின்சிவாடே. அவரது தாயார் கருணா மாநகராட்சி பாஜக உறுப்பினராக உள்ளார். பிரசன்னா தன் உறவினருடன் கார் ஷோரூம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவர், தன் தந்தையின் முக்கிய பயன்படுத்தி நெற்றிப்பொட்டில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு அவரின் உறவினர்கள் அறைக்குச் சென்று பார்த்தனர்.

அப்போது பிரசன்னா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.