பாஜக செயற்குழு கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்நிலையில் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜா கு சரவணகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கே கே ஆர் கணேஷ், எல் கிஷோர் குமார், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா கூறியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சியின் அராஜகத்தை மக்களுக்கு எடுத்து கூறும் விதமாக பிரதமரின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை ஒவ்வொரு வீடாக சென்று கூற இருக்கின்றோம்.

கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பாரத பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தில் சுமார் 300 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படுகிறது. இது பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கொடுத்துள்ள பரிசு தமிழ்நாட்டு மக்கள் மீதும் தமிழ் மொழி மீதும் பிரதமர் அதிக பாசம் வைத்திருக்கின்றார். பாஜகவை பொருத்தமட்டில் வரும்  பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெறப்போவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து  பேசிய அவர் திமுக அரசை கண்டித்து வருகிற 30-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மக்கள் தொடர்பு பேரியக்கம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.