பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங். இவர் மத்திய பாஜக அரசை விமர்சித்து காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பேசிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியது. இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது டீ பேக் வீடியோ என்பது பின்னர் தெரிய வந்தது. இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் தற்போது தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நண்பர்களே தீ பேக் வீடியோ குறித்து கவனமாக இருங்கள் என்ற பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் தரப்பில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் டீபேக் வீடியோவை உருவாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ரன்வீர் சிங் வாரணாசி கோவிலுக்கு நடிகை கீர்த்தி சனோனுடன் சென்றபோது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வாரணாசி கோவிலின்  சிறப்பம்சங்கள் குறித்தும் அங்கு பிரதமர் மோடி செய்த நன்மைகள் குறித்தும் அவர் பெருமையாக பேசினார். இந்த வீடியோவை தான் பாஜகவுக்கு எதிராக அவர் பேசுவது போன்று சித்தரித்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.