அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் பாஜகவில் இணையுமாறு தன்னை நிர்பந்தித்ததாக டெல்லி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தங்கள் கட்சியில் வந்து இணையுமாறு பாஜக என்னை அணுகியது. பாஜகவில் இணையாவிட்டால் அடுத்த ஒரு மாதத்தில் அமலாக்க துறையால் நான் கைது செய்யப்படலாம். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே நான் உட்பட நான்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்படலாம் என்று அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.