நடிகரும், ஒடிசா கேந்திரபாரா பிஜு ஜனதாதளம் எம்.பியுமான அனுபவ் மொகந்தி நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். பிஜு ஜனதா தள கட்சியின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த இவர், கடந்த 30ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், டெல்லியில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். ஏற்கெனவே, கடந்த வாரம் பார்த்ருஹரி மகதாப் என்ற மற்றொரு பிஜு ஜனதாதள எம்.பியும் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.