மிழக முதல்வர் ஸ்டாலின் தூர்தர்ஷன் காவி நிறமாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினார்கள். தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீதும் காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்.

வானொலி என்ற தூய தமிழ் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதம் ஆக்கினார்கள். பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள். தற்போது தூர்தர்ஷன் இலட்சினையிலும் காவிக்கரை அடித்துள்ளார்கள். மேலும் இது அனைத்தையும் காவிமயமாக்கும் திட்டத்தின் முன்னோடி தான் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.