கோவை அரசு கலைக்கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன் தினம் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய சீமான், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், தமிழ் புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
திராவிட கட்சிகள் காசே இல்லாமல் கூட்டத்தைக் கூட்டினால் கட்சியை கலைத்து விட்டு செல்வதாக சவால் விட்டுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் அல்ல என்றும் திமுக தான் பாஜகவின் உண்மையான B டீம் என்றும் விமர்சித்துள்ளார்