பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்தோடு நிறைவடைகிறது. அடுத்த தலைவர் என்று பேசப்பட்ட பியூஷ் கோயல், சிவராஜ் சிங் ஆகியோர் அமைச்சர்கள் ஆகிவிட்டனர். ஆகையால் சுனில் பன்சால், வினோத் தாவ்டே, அனுராக்சிங் தாக்கூர், ஓம் பிர்லா ஆகியோரது பெயர்கள் அடுத்த தலைவர் பட்டியலில் கிசுகிசுக்கப்படுகிறது. இதில் யார் பாஜகவின் அடுத்த தலைவர் என்பது சீக்ரெட் ஆக உள்ளது.