பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் ஜகா அஷ்ரஃப், இந்தியாவை ‘துஷ்மன் முல்க் (எதிரி நாடு)’ என்று அழைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். பாகிஸ்தான் அணி லாகூரில் இருந்து துபாய் வழியாக ஹைதராபாத் சென்றடைந்தது. ஹைதராபாத் சென்றடைந்த அவர்களுக்கு இங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் கூடியிருந்த கூட்டத்தினரிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் உற்சாக வரவேற்பு கிடைத்தது. அவர்களுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 

2016-க்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் காலடி எடுத்து வைப்பது இதுவே முதல்முறை. 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் இடைநிறுத்தப்பட்டன, இதில் கிரிக்கெட் உறவுகளும் முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு 2012-13ல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே ஒரு இருதரப்பு தொடரில் விளையாடியது. ஆனால் அதன்பிறகு, இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஏசிசி நிகழ்வுகளில் மட்டுமே சந்தித்துள்ளன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் ஹைதராபாத்தில் தங்களுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு திகைத்து, சமூக ஊடகங்களில் தங்கள் எதிர்வினைகளைப் பகிர்ந்து கொண்டனர்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் இதனால் மனமகிழ்ச்சி அடைந்தது. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்ற வீரர்களும் இந்த கௌரவத்தால் நெகிழ்ந்து சமூக ஊடகங்களில் அன்பை வெளிப்படுத்தினர்.

ஆனால், மறுபுறம், பிசிபி தலைவர் ஜகா அஷ்ரப் வெறுப்பை விதைக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். போட்டிக் கட்டணம் மற்றும் வீரர்களுக்கான ஊதியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்வை அறிவிப்பதற்காக ஊடகவியலாளர்களுடன் உரையாடும் போது, ​​அவர் இந்தியாவை “துஷ்மன் முல்க்” (எதிரி நாடு) என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

2023 ஐசிசி உலகக் கோப்பையை நடத்தும் இந்தியாவைப் பற்றி மறைமுகமாக “எதிரி நாட்டில்” அல்லது இந்த போட்டி எங்கு விளையாடினாலும் வீரர்களின் மன உறுதி அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார். அந்த வீடியோவில் ” “வீரர்கள் ஹைன் இன்கா மோராலே உபர் ரெஹ்னா சாஹியே ஜப் யே கிசி துஷ்மன் முல்க் யா கிசி பி ஜகா கெல்னே ஜாயென் ஜஹான் வோ போட்டி ஹோ ரஹா ஹோசோடோ அவர்கள் தேசத்தின் முழு ஆதரவுடன் அவுர் உங்கோ ஏக் அச்சே தரிகே சே பெர்ஃபார்ம் கர் சாகென். (வீரர்கள் எதிரி நாட்டிற்குச் செல்லும்போது அல்லது போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்லும்போது, ​​​​அவர்களுக்கு மனவுறுதி உயர வேண்டும். அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு நீங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்)” அதாவது, பாகிஸ்தான் வீரர்கள்  சிறப்பாகச் செயல்பட தேசத்தின் முழு ஆதரவுடன் செல்ல வேண்டும் என்று பிசிபி தலைவர்  கூறுவதைக் கேட்கலாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரப்பின் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  ஜக்கா அஷ்ரப்பின் இந்த கருத்துக்கு பின்னர் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு உள்ளது, மறுபுறம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதால் இந்திய ரசிகர்கள் நாம் என்ன செய்தாலும் மனநிலை இப்படித்தான் இருக்கும்போல என்று கோபமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதேபோல பாகிஸ்தானியர்கள் என்ற வகையில், ஜக்கா அஷ்ரப்பின் இத்தகைய கருத்தை நாங்கள் கண்டிக்கிறோம். எங்கள் அணியை அன்புடன் வரவேற்ற இந்திய ரசிகர்களை நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. எல்லையில் அன்பும் அமைதியும்” என பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ரசிகர்களும் இவரது பேச்சுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பயனர், கண்டிக்கிறோம்! இந்தியர்களிடமிருந்து இவ்வளவு அன்பான வரவேற்பைப் பெற்ற பிறகு, ஜகா அஷ்ரஃப் இதை ஒளிபரப்பியிருக்கக்கூடாது. இது வெறுப்பையும் எதிர்மறையையும் பரப்பும். இந்த 2 நாடுகளுக்கு இடையே பதற்றம் வெளிப்படுவது போல் தோன்றும் போதெல்லாம், ஏதோ ஒன்று நிகழ்ந்து அழகைக் கெடுத்துவிடும்” என தெரிவித்துள்ளார்..