பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த 1996ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) என்ற கட்சியை  தொடங்கினார். அதன் பிறகு கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக அவர் ஆட்சியை பிடித்தார். தற்போது அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் பிரிட்டனிலிருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை இம்ரான் கானுக்கு சொந்தமான ஆல்-கதிர் அறக்கட்டளையில் வரவு வைத்துள்ளனர். இதற்கு அவர் பல நூறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக அவர் மீது கடந்த 2023ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு துறை வழக்கு பதிவு செய்து, இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் அதற்கான தண்டனை விவரங்களை பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதோடு இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிதை தண்டனை மட்டுமின்றி இம்ரான் கானுக்கு 10 லட்சமும், புஸ்ரா பீவிக்கு 5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இவர்கள் இந்த அபராதத்தை செலுத்த தவறினால், இம்ரான் கானுக்கு கூடுதலாக 6 மாத சிதை தண்டனையும், புஸ்ரா பீவிக்கு 3 மாத சுதந்திரம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.