2023 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெஷாவர் சல்மி  போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் பாபர் அசாம் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்தார்..

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை அடித்தார். ஆனால் அந்த சிக்ஸர்கள் சர்வதேச போட்டியில் அடிக்கப்படவில்லை. பாகிஸ்தான் சூப்பர் லீக் 2023 (PSL) தற்போது நமது ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் நடைபெற்று வருவது தெரிந்ததே. சமீபத்தில் (13ஆம் தேதி) தொடங்கிய பாகிஸ்தான் சூப்பர் லீக் 2023 இன் தொடக்க ஆட்டத்தில் லாகூர் கலாந்தர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான் அணிகள் மோதியது. இப்போட்டி அந்நாட்டு கிரிக்கெட் பிரியர்களை மிகவும்  உற்சாகப்படுத்தும் வகையில் நடைபெற்றது. இந்தப்போட்டி கடைசி பந்து வரை செல்ல, இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் முல்தான் சுல்தானை வீழ்த்தியது லாகூர் கலாண்டர்ஸ். கடைசி பந்து வரை வெற்றி சமநிலையில் இருந்ததால் பிஎஸ்எல் ரசிகர்களை ஆட்டம் ஆட்கொண்டது.

பாபர் ஆசாமின் தொடர்ச்சியான சிக்ஸர்களைப் பொறுத்தவரை… பாகிஸ்தான் சூப்பர் லீக் 2023 இல் பெஷாவர் ஜால்மி அணியை பாபர் அசாம் வழிநடத்துகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் வரலாற்றில் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். இந்த சீசனின் 2வது போட்டியில் கராச்சி கிங்ஸ் – பெஷாவர் அணி மோதியது. இப்போட்டியில் கராச்சியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாபர் அசாமின் பெஷாவர் அணி. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் பாபர் அசாம் 46 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். 199 ரன்களை துரத்திய கராச்சி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் பெஷாவர் சல்மியின் முதல் போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது பாபர் அசாம் அனல்பறந்தார். இந்த பயிற்சி ஆட்டத்தில், பாபர் அசாம் தனது உடற்தகுதியை சரிபார்த்து, தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 9 சிக்ஸர்களை அடித்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2016 இல் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பாபர் அசாம், அந்த ஆண்டு இஸ்லாமாபாத் யுனைடெட்டைப்அணிக்காக ஆடினார். அதன் பிறகு 2017 முதல் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆனால் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில்,  பெஷாவர் ஜால்மி அணியால் பாபர் அசாம் எடுக்கப்பட்டார். அதற்கு பதிலாக, பெஷாவர் சல்மி சோயப் மாலிக் மற்றும் ஹைதர் அலியை கராச்சி கிங்ஸ் வாங்கியது.