
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் கதையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இப்போது கதையின் போக்கு பிடிக்காமல் எப்போது இந்த சீரியலை முடிப்பார்கள் என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டது.
அதே நேரம் சீரியலின் தற்போதைய கதைக்களத்தை வைத்து விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் முடிய போகிறது என்று ரசிகர்கள் யூகித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பாக்யா கோபி மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி விட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்கிறது.
இது பற்றி தெரிந்து கொண்ட ஈஸ்வரி தனது மகனை தேவையில்லாமல் அலைக்கழித்து கேசை வாபஸ் வாங்கியதாக பாக்யாவை திட்டுகிறார். அப்போது கோபி பாக்கியாவிற்கு ஆதரவாக ஈஸ்வரியிடம் பேசுகிறார். இதைப் பார்த்து ராதிகா அதிர்ச்சியடைகிறார். இவ்வாறாக ப்ரோமோ முடிந்துள்ளது.