பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்ற ஆசைப்பட்ட லிங்குசாமி… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்ற லிங்குசாமி ஆசைப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இவர் பிரபல இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதைத்தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன், சண்டக்கோழி, பையா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து திடீரென ஏற்பட்ட நஷ்டம் காரணமாக லிங்குசாமி திரையுலகில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். தற்போது இவர் பிரச்சினைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்ற லிங்குசாமி ஆசைப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Find creative solace in poetry: N. Lingusamy | Entertainment News,The  Indian Express

90-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாக்யராஜ். இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் தான் லிங்குசாமி சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார். அந்த சமயத்தில் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த அந்த ஏழு நாட்கள் படத்தின் கதையை லிங்குசாமி தனது நண்பர்களிடம் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டுள்ளார். மேலும் பின்னாளில் பாக்யராஜ் போல கதை எழுதி, மணிரத்னம் போல பிரம்மாண்டமாக அந்த கதையை படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் லிங்குசாமியால் கடைசிவரை பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்ற முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *