“பாகிஸ்தான் சிறையில் 650 இந்தியர்கள்”…. வெளியான சிறை கைதிகளின் பட்டியல் பரிமாற்றம்….!!!

இந்தியா பாகிஸ்தான் தூதரகம் மூலம் தத்தமது சிலைகளில் வாடும் சிறை கைதிகள் மற்றும் மீனவர்கள் பட்டியலை பரிமாறி கொண்டுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள சிறைகளில் 309 பாகிஸ்தான் கைதிகள் மற்றும் 95 மீனவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல பாகிஸ்தானில் உள்ள சிறையில் இந்தியர்கள் 49 பொதுமக்களும் மற்றும் 633 மீனவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இருநாட்டு தூதரகங்ளுக்கு இடையே 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மற்றும் ஜூலை 1ஆம் தேதிகளில் இரு நாடுகளும் தங்களது சிறைகளில் உள்ள அண்டை நாடு கைதிகளின் பட்டியலை பரிமாறிக் கொண்டு வருகின்றன. இதற்கிடையில் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர்களை விடுதலை செய்து திரும்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்திய மீனவர்கள் 536 பேர் மற்றும் பொதுமக்கள் 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த பட்டியல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *