பாகிஸ்தானை விமர்சித்த…. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பாகிஸ்தான் இராணுவத்தை விமர்சித்த சமூக ஆர்வலர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் ஒரு மாகாணமான பலுசிஸ்தானில் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் கரிமா பலோச் என்ற சமூக ஆர்வலர் பாகிஸ்தானின் ராணுவம் செய்த இந்த அட்டூழியங்களை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளிநாட்டில் அடைக்கலமாக இருந்தபோது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது முதல்முறை அல்ல இது போல் ஏற்கனவே பலுசிஸ்தானிற்க்கு ஆதரவாக இருந்த ஊடகவியலாளர் சாஜித் ஹுசைன் என்பவரும் ஸ்வீடன் நாட்டில் அடைக்கலமாக இருந்தபோது மர்மமாக  சடலமான நிலையில் மீட்கப்பட்டார்.

இதனால் பாகிஸ்தான் பற்றி விமர்சனங்களை கூறுபவர்கள் பிறநாடுகளில் அடைக்கலமாக இருந்தாலும் எந்த நேரத்திலும் தங்களை கொன்று விடலாம் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தானின் ராணுவம் பலுசிஸ்தானில் உள்ள மக்களை கடத்திச் சென்று கொல்வது போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பலுசிஸ்தானில் வாழும் ஆயிரக்கணக்கான அரசியல் ஆர்வலர்கள் அவர்களின் கொடுமைகளிலிருந்து தப்பி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் ஊடகவியலாளர்களும் அடங்குவர்.