பாகிஸ்தானை அல்லா தான் உருவாக்கினார்… நிதி மந்திரி இஷக்யூ தர் பேச்சு…!!!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக உள்ளது. இந்த ரூபாய் வீழ்ச்சியின் காரணமாக உலக வங்கி உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் வாங்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய மத கடவுள் அல்லா தான் காரணம் என பாகிஸ்தான் நிதிமந்திரி இஷக்யூ தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசிய போது, பாகிஸ்தானை இஸ்லாமிய மத கடவுள் அல்லாஹ் உருவாக்கியுள்ளார் என்றால் அவர் அதை பாதுகாப்பார். மேலும் அதை வளர்ச்சி பெற செய்வார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம். நவாஸ் ஷெரீப் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் வளர்ச்சி பாதையை நோக்கி சென்றது. ஆனால் அதிலிருந்து தவறியது. நாட்டின் பேரழிவை சந்தித்த கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் பார்த்தனர். ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசின் குழு தேர்தலுக்கு முன்பாக நாட்டின் பொருளாதார நிலைமையை முன்னேற்ற முயற்சி செய்கிறது எனக் கூறியுள்ளார்.