பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய தலீபான்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த 2021ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க படைகள் முழு அளவில் வாபஸ் பெற்றபோது, ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்களை அந்நாடு பெருமளவில் அப்படியே விட்டுசென்றது. ஆப்கானிஸ்தானிய படைகளிடம் விட்டுசென்ற இந்த ஆயுதங்கள் அனைத்தும் தலீபான்கள் வசம் இப்போது சென்றுவிட்டது. அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் இந்த ஆயுதங்களும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படாது என்றும் தலீபான்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் இதற்கு முரணாக அவர்கள் ஆயுத சப்ளையில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டை கனடாவை அடிப்படையாக கொண்டு செயல்படகூடிய சர்வதேச உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் அறிக்கையில், ஆயுத கடத்தல்களை தடுப்பதற்கு முறையான பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். ஏனென்றால் நாங்கள் முன்னேறி விட்டோம் என்று தலீபான்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். ஆனால் ஆயுதசந்தை முழு அளவில் செழித்து வளருகிறது.
பாகிஸ்தானுக்கு நாடுவிட்டு நாடு ஆயுதங்கள் கடத்தப்படுகிறது. இறுதியாக இந்த ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக எல்லை கடந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயன்படுத்தப்படும் என அதிர்ச்சிதர கூடிய குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறது. அதற்கு முன் சட்டவிரோத ஆயுத கடத்தலை கட்டுப்படுத்த தவறியதற்காக பாகிஸ்தான் மிகபெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும். அதிகளவில் இந்த ஆயுதங்களை வைத்து இருக்கும் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானிலிருந்து செயல்படும்போது, அந்நாடே முதலில் பாதிக்கப்படும் என அந்த அமைப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *