பாகிஸ்தானில் மீண்டும் பதற்றம்.. அரசியலை விட்டு விலக தயார்.. இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு..!!!

இம்ரான் கான் கட்சியை தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் உண்மையான காரணத்தை கூறினால் அரசியலை விட்டு விலக தயார் என இம்ரான் கான் சவால் விடுத்துள்ளார். நிதி முறைக் கேடு வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் இம்ரான் கான் கடந்த ஒன்பதாம் தேதி திடீரென துணை ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து இம்ரான் கட்சியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் பத்துக்கு மேற்பட்ட ராணுவ நிலைகள் தாக்கப்பட்டது. இதில் பத்து பேர் உயிரிழந்தனர். இதனால் அவரது கட்சியை தடை செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு  பாதுகாப்பு துறை அமைச்சர் கூறி இருந்தார். இது குறித்து பேசி இம்ரான்கான் தன் மீதான நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்து விட்டால் நான் அரசியலை விட்டு விலக தயார் என கூறியுள்ளார்.

Leave a Reply