பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அங்கு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூபாய் 35 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆயில் போன்றவற்றின் விலை தலா ரூ.18 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.249 ஆகவும் டீசல் விலை ரூ.262.80 ஆகவும் மண்ணெண்ணெய் விலை ரூ.189.83 ஆகவும் டீசல் ஆயில் விலை லிட்டருக்கு ரூ.187 ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
மக்கள் விருப்பப்படும் 100 நகரங்கள்… இந்தியாவுக்கு ஒரே ஒரு இடம் மட்டும் தான்… எந்த நகரம் தெரியுமா..?
ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆய்வு மக்களை கவர்ந்த நகரங்களை பட்டியலிடுவது தொடர்பான ஆய்வாக்கும். இதன் மூலம் முதல் 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. பொருளாதாரம், தொழில் துறை…
Read moreபெண்கள் மருத்துவம் படிக்க தடை…. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அறிவிப்பு…. கிரிக்கெட் வீரர் வேதனை….!!!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், பள்ளிக்குச் செல்ல தடை, வேலைக்கு செல்ல தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணையுடன் செல்ல வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள்…
Read more