பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு…!! 3 சீனர்கள் உட்பட 4 பேர் பலி…!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைகழக வளாகத்திற்குள் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள சீனமொழி பயிற்றுவிக்கும் கன்பூசியஸ் என்ற மையத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 சீனர்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் அந்த மையத்தின் இயக்குனர் ஹுவாங் கிபிங், டிங் முபெங், சென் சாய் ஆகிய 3 பேர் சீனர்கள் ஆவர். மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்த காலித் ஆவார். காலித் அவர்களுக்கு டிரைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர இரண்டு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதோடு அந்த வேனில் 8 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *