பவானி முகாமில் தங்கி இருந்த பெண்ணிடம்…. போனில் பேசிய முதல்வர்…. நெகிழ்ச்சியில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், காவிரிக்கரை, கொடுமுடி போன்ற பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 369 குடும்பங்களை சேர்ந்த 1,277 பேர் 14 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பவானி பகுதி மக்கள் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் 10 க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து பவானி கந்தன் நகர், காவிரி நகர், பாலா கேஸ் குடோன் பகுதி சேர்ந்தவர்கள் என 60 குடும்பங்களை சேர்ந்த 70 ஆண்கள், 69 பெண்கள், 34 சிறுவர்கள் என மொத்தம் 173 பேர் கந்தன் பட்டறை பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு தேவையான உதவிகளை வட்டாட்சியர் சரவணன் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இந்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சென்று இருந்தார். அப்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி செல்போன் மூலம் பவானி கந்தன் பட்டறையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயசுதா என்ற பெண் என்பவரிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், அந்த பெண்ணிடம் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் உங்களுக்கு என்ன வசதிகள் செய்ய வேண்டுமோ அதை கலெக்டரிடம் கூறுங்கள், அவர் செய்து கொடுப்பார் என்று கூறினார். மேலும் முதல்வர் தன்னிடம் செல்போனில் பேசியதால் அந்த பெண் நெகிழ்ச்சி அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *