தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றினார். குறிப்பாக சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்தும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதோடு ஒரே நாடு ஒரே தேர்தல், ஜாதிவாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு ரத்து, மாதத்திற்கு ஒருமுறை தமிழகத்தில் மின் கணக்கீடு, விலை உயர்வு போன்ற பல்வேறு விஷயங்களுக்கு விஜய் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பிறகு முன்னதாக முதல் மாநாட்டின் போது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று விஜய் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் முடிவடைந்த போது பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி தானே என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்து பழைய கூட்டணியை விடுவித்து புதிய கூட்டணியில் சேரும் நோக்கத்தில் ராமதாஸ் இப்படி பதிவிட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதாவது பழைய கூட்டணியிலிருந்து வெளியே வந்து புதிய கூட்டணியில் இணைய ராமதாஸ் முடிவு செய்து இப்படி ஒரு பதிவை போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ராமதாஸ் அதைப் பற்றி விளக்கம் எதுவும் தரவில்லை. மேலும் அவர் என்ன நோக்கத்தில் அப்படி ஒரு பதிவை போட்டுள்ளார் என்பது அவர் விளக்கம் அளித்தால் மட்டும்தான் தெரியவரும்.