பழம்பெரும் மூத்த நடிகை ஜமுனா காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

பழம்பெரும் நடிகை ஜமுனா (86) காலமானார். ஹைதரபாத்தில் உள்ள தனது வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு. கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மிஸ்ஸியம்மா, தங்கமலை ரகசியம், மனிதன் மாறவில்லை, குழந்தையும் தெய்வமும், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஜமுனா மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.