முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் பிரபல நடிகருமான கே. சிவராம் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். கன்னட திரை உலகில் பிரபலமாக வளம் வந்த இவர் சிவில் சர்வீசஸ் மற்றும் திரைப்பட துறை ஆகிய  இரண்டிலும் சிறந்து விளங்கினார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சினிமாவிற்கு அவர் செய்த பங்களிப்பை தவிர 2013 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் ஈடுபட்டு வந்தார்.