பழமையான கோவிலில் 108 சங்காபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மூக்கனாங்குறிச்சி கிராமம் நத்தமேட்டில் பழமையான வீரபாண்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமாவார நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று 108 சங்கு அபிஷேகத்துடன் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

அப்போது அக்கினி குண்டம் வளர்த்து பல்வேறு மூலிகை வேர்கள், இலைகள் உள்ளிட்ட பொருட்களை இட்டு வேத மந்திரங்களை ஓதினர். இதனையடுத்து சங்கிலிருந்த இளநீர், பால், புனித நீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.