பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழக்கு விழா… “திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை”… தமிழக அரசு உத்தரவு…!!!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 வருடங்களுக்குப் பின் தற்போது வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழங்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவினை முன்னிட்டு வருகிற 27-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை குடமுழக்கு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவின் போது தீபாராதனைக்கு பின் ராஜகோபுரம் உட்பட கோவில் நிர்வாகம் முழுவதும் ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவை ஏற்பாடு செய்யப்பட்டு பெங்களூருவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான கலை மற்றும் அறிவியல் பண்பாட்டுக் கல்லூரியின் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 20 காவலர்கள் என மொத்தம் 21 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.