முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி 2006 ஆம் வருடத்திற்கு பிறகு கடந்த 2018 ஆம் வருடம் குடமுழுக்கு நடந்திருக்க வேண்டும்.

ஆனால் நடக்கவில்லை. இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி கோவிலின் குடமுழுக்கு இந்த வருடம் நடத்த கோவில் அறங்காவலர் குழு முடிவு செய்ததால் குடமுழுக்கு பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஜனவரி27 ஆம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகத்தின் போது பழனி பேருந்து நிலையத்தில் இருந்து பக்தர்களை கோயிலுக்கு அழைத்து வர இலவச பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கும்பாபிஷேகத்தை யொட்டி நாளை முதல் ஜன.. 26 வரை மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூலவரை தரிசிக்க முடியாது.