தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2022-2023 ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 10-ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகியவற்றிற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. எனவே தகுதி வாய்ந்த பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கான புதிய விண்ணப்பங்கள், சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வருமான சான்றிதழ், சேமிப்பு கணக்கு புத்தகம், வருகை சான்றிதழ், தேர்ச்சி சான்றிதழ், ஆதார் ஆகியவற்றை வைத்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாயிலாக escholarship.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை பெற வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக விண்ணப்பித்து பழங்குடியின மாணவ, மாணவிகள் பயன்பெறலாம் என கூறியுள்ளார்.