பழங்குடியின மக்களுடன்… நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!!

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் வேலுமணி நடனமாடி வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அட்டுக்கல் பழங்குடி கிராமத்தில், பழங்குடிமக்களுடன் இணைந்து உள்ளாட்சித் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணி, பழங்குடிகளின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி வாக்குகள் சேகரித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.