பள்ளி வளாகத்திற்குள் புகுந்து கடித்த தெரு நாய்கள்…. 5 மாணவர்கள்; 2 ஆசிரியர்கள் காயம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கோபி சாலையில் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பள்ளிக்கூட வளாகத்தில் மாணவிகள் நின்று கொண்டிருந்த போது திடீரென 5 தெரு நாய்கள் உள்ளே புகுந்தது. இதனையடுத்த நாய்கள் கடித்ததால் 5 மாணவிகள் வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டனர். அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்கள் தெரு நாய்களை விரட்ட முயன்ற போது அவர்களையும் நாய்கள் கடித்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி காயமடைந்த 7 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினார்கள். அந்த தெருநாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.