
கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் பாலா பகுதியில் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவரும் படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த 10-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் ஓய்வு நேரத்தில் வகுப்பறையில் தனியாக இருந்தார். அப்போது அந்த மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் 7 வகுப்பறைக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த மாணவியின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கினர். பின்னர் அந்த மாணவியை நிர்வாணமாக தங்கள் செல்போனில் போட்டோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்த சம்பவத்தை நினைத்து பயந்து போன மாணவி அதைப்பற்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் என யாரிடமும் கூறவில்லை. அந்த மாணவர்கள் மாணவியை மிரட்டியதால் பயந்து போய் வெளியே சொல்லாமல் இருந்த நிலையில் திடீரென அவர்கள் சமூக வலைதளத்தில் மாணவியின் நிர்வாண வீடியோவை பதிவிட்டனர். இந்த சம்பவம் மாணவிக்கு தெரிந்த நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது மதிய நேரத்தில் அந்த மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்த அதே மாணவர்கள் மீண்டும் நிர்வாணமாக்கி வீடியோ எடுக்க முயற்சி செய்தனர்.
பின்னர் அந்த மாணவி கத்தி கூச்சலிட்டு அங்கிருந்து ஓடி வெளியே வந்தார். பின்னர் ஆசிரியர்கள் வந்த நிலையில் நடந்த சம்பவத்தை மாணவி அழுது கொண்டே கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள், கல்வித்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவியின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவியின் தந்தை புகார் கொடுத்த நிலையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய அறிக்கை அளிக்கும்படி மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.