ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதப்பட்டினம் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை சிறுமி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது வகுப்பறையில் நீண்ட நேரமாக சிறுமி பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கழிவறைக்கு சென்ற நிலையில் அங்கேயே குழந்தை பிறந்தது.

அந்த மாணவி தன் உடல் நலம் குறித்து யாரிடமும் தெரிவிக்காத நிலையில் நீண்ட நேரமாக வகுப்பறைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மாணவி மிகவும் மோசமான நிலையில் கழிவறையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு  வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.