பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. இரணியில் சோகம் …!!

இரணி  அருகே 8_ஆம்  பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் இரணி  காரங்காட்டில் உள்ள நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். அஜிஷா எனும் இவரின் மகள்  நாகர்கோவிலில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு  இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. அஜிஷா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு இறுதிதேர்வினை  எழுத சென்றிருக்கிறார் . தேர்வு எழுதி முடித்தி விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய அஜிஷா சிறிது நேரம் விளையாடி வந்துள்ளார்.திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவரது பெற்றோர்களும், ஊர்மக்களும் விரைந்து சென்று  பார்த்த போது அஜிஷா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

Image result for தற்கொலை

இதையடுத்து உயிருக்கு  போராடிக் கொண்டிருந்த அஜிஷாவை அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அஜிஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டார் என கூறினார். இதுகுறித்து  இரணி  போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளி மாணவி தற்கொலை செய்த்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.