பள்ளி மாணவிகளிடையே மோதல்….. 4 நாட்கள் விடுமுறை….. பெரும் பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம், சுப்பிரமணிய பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்துள்ளனர். அந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் பள்ளி மாணவர்கள் அருகே உள்ள குருசுகுப்பம் கிருஷ்ணராசலு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இரு பள்ளி மாணவர்களுக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல் இன்று பள்ளி செயல்பட்ட நிலையில் இரு பள்ளி மாணவர்களுக்கும் இடையே திடீரென்று மோதல் எழுந்துள்ளது. மேலும் வகுப்பறையை மூடிவிட்டு இருதரப்பு மாணவிகளும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெற்றோர்களும் பள்ளியில் குவிந்ததால் மேலும் பரபரப்பு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவிகளை அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பள்ளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.