டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பா.ஜ.க ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் போதையில் ரகளை செய்தால் நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?.. என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்கக்கூடாது என்ற வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வழக்கறிஞரை கடிந்து கொண்ட நீதிபதி, “அமைச்சர் எப்படி பொறுப்பேற்க முடியாது என்று கூற முடியும்? என்று கேட்டுள்ளார். அதன்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடையாத காரணத்தால் வழக்கின் விசாரணை மீண்டும்  நாளை தள்ளிவைக்கப்பட்டது.