“பள்ளி மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனி”… 60 பேர் மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு..!!!!

தனியார் பள்ளியில் தேனி கொட்டியதில் 60 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் கலைமகள் கலாலயா என்னும் தனியார் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மாலை பள்ளி மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலமாக காற்று வீசியதில் தேக்கு மரத்தில் இருந்த மலை தேனீக்கள் திடீரென கலைந்துள்ளது. இதனை அடுத்து அதிலிருந்து வெளியேறிய மலைத்தேனீக்கள் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்களை கொட்டியுள்ளது.

இந்த தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்று மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் முதலுதவி பெற்று வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில் படுகாயம் அடைந்த ஐந்து மாணவர்கள் மட்டும் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.